ஆண்டாண்டு காலமா ஆண்ட பரம்பரை
ஆண்டவன் அருள் பெற்று வாழ்ந்த பரம்பரை
ஆணிவேரா சோழியத்தில் நீண்ட பரம்பரை
ஆபத்துக்கள் பலகண்டு மீண்ட பரம்பரை

பழுவேட்டரையர் பரம்பர(ரை) பழுதில்லா பரம்பர(ரை)

பாட்டனுக்கு பாட்டன்தான் பாட்டுடைத் தலைவன்தான்
வேட்டையர்னு பேரெடுத்த வெம்புலியின் பேரன்தான்…
பனைமரக் கொடியேந்தி பழுவூர ஆண்ட இனம்
கணைகள் தாக்கினாலும் கர்ஜிக்கும் போர்க்குணம்.

வானத்துல விண்மீனா? மார்புல விழுப்புண்ணா?
ஆபரணமா தரிச்சாறு அய்யா எங்க வேட்டையரு…
வேலு தந்தது கொஞ்சம்; வாளு தந்தது கொஞ்சம்
தந்தம் முட்டியதில் மீதி வந்தது சொச்சம்…
எண்ணி அறுபத்து நாலு ஏற்றுக்கொண்ட நெஞ்சம்
விழுப்புண் என்று சொல்லும் வீர மச்சம்…

விழுப்புண் பார்த்திருக்கோம்
விழுந்த மண் பார்த்ததில்ல
விழுப்புண் பார்த்திருக்கோம் – வேட்டையறு
விழுந்து மண் பார்த்ததில்ல….

கல்வெட்டில் பொரிச்சுவச்சான்
இராஜராஜன் மெய்கீர்த்தி;
தோளுல தழும்புகதான்
வேட்டையரின் மெய்கீர்த்தி…. (ஆண்டாண்டு காலமா)
………………………

சோலிப்பார்க்க வர்லிங்க; கூலி கேட்க வர்லிங்க;
சோழியத்தை காக்கத்தான், சூளுரைச்சு வந்தாங்க….
செம்படைய அமைச்சாங்க செங்கோல காத்தாங்க…
பனைமரக் கொடிஏந்தி தானைகள(ளை) காத்தாங்க..

யானை மேல ஏறி வந்தா மகராசன்தான்
யானை முன்னாள் சாடி நின்னா(ல்) எமராசன்தான்..
வேட்டையரு, முன்னால் வந்து நின்னா நின்னா
ஊசிப்படையும் யானையாகும் தானா தானா…

……………………..