திரிகோணமலை தமிழ் பேசினாராம் இந்திய தேசத்து பிதாமகன் சிறப்பு மிக சிறப்பு ஆம் உங்கள் நாவில் என் தாய் தமிழ் வருகிறதென்றால் மகிழ்ச்சி ஆனால் வெட்க கேடு வாழ வழியில்லை என்றா வீடு கேட்டோம் இல்லை இல்லை சொந்த மண்ணில் தமிழர்கள் தமிழர்களாகவே வாழ ஆசைபட்டதின் விளைவு மிக பெரிய துரோகத்தால் வீழ்த்தப்பட்டோம் ஆம் தமிழன் என்றும் துரோகத்தால் மட்டுமே வீழ்த்தப்பட்டவன்..
நீங்கள் மார்தட்டி உரையாற்றிய திரிகோணமலை யின் வரலாறு தெரியுமா
ஆம் எங்கள் பேரரசர்கெல்லாம் பேரரசர் எங்கள் மூத்தவன் தாத்தன் இராவனேசுவரன் ஆண்ட பூமி அய்யா அது
எங்கே ஒர் முறை உச்சரித்து பார் “இராவனேசுவரன்” என்று ஆம் உடல் சிலிர்க்கும்.(சும்மா அதிருதுல)
இராவணன் – இரு ஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்று பொருளாகும். மேலும் இராவணன் என்பதற்குப் பிறர்க்கில்லா அழகன் என்னும் பொருளும் உண்டு. இராவணன் – இராவண்ணன் (இரா=இருள்=கருமை) என இருளைப் போன்ற கருமை நிறமுடையவன் என்று பொருளாகும் வண்ணமும் உள்ளது.
இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையில் விச்சிரவாவு என்ற மன்னர், தமிழகத்தினை ஆண்டுவந்தார். அவருடைய மனைவின் பெயர் கேகசி. இவர்கள் இருவருக்கும் இராவணன், கும்பகன்னன்,விபீடணன் என மூன்று ஆண் பிள்ளைகளையும் காமவல்லி என்ற பெண் பிள்ளையும் பிறந்தனர். விச்சிரவாவின் மரணத்திற்கு பிறகு இராவணன் தமிழகத்தினை ஆண்டான். முல்லை நாட்டு மன்னன் மாயோனின் மகள் வண்டார் குழலியை இராவணன் காதலித்து திருமணம் செய்துகொண்டான். இருவருக்கும் சேயோன் என்ற மகன் பிறந்தான்.
இராவணனைத் தமிழனாக அடையாளப்படுத்திய திராவிட மற்றும் தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றாளர்கள் அவனை நல்ல இயல்புகள், சிறப்புகள் உள்ள எதிர்நாயகனாகச் சித்தரித்தனர். ஆம் அவர்கள் வேலை அவ்வளவே தங்களை அடையாளப்படுத்த ஒருவன் தேவை😀😀😀அரசியில்வாதிகளிடம் அது மட்டுமே எதிர்பார்க்கமுடியும்.
திரிகோணமலை ஒறுகினைந்த தமிழரின் தலைநகரம் வரலாறு இதோ.
வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கோயில் ஒன்று சமுத்திர ஓரத்தில், மலையின் அடிவாரத்தில் இருந்ததென நம்பப்படுகின்றது. அது கி.மு.306 இல் நிகழ்ந்த கடல் கொந்தளிப்பில் அக்கோயில் கடலுக்குள் மூழ்கிவிட்டதாக இலங்கைச் சரித்திரம் என்னும் நூலில் இவ்வாறு நிகழ்ந்ததெனக் கூறப்பட்டுள்ளது. ஆழ்கடலில் அமர்ந்திருக்கும் கோணேஸ்வர பெருமானுக்கு இன்றும் மலைப் பூஜை செய்யப்படுவதை நாம் காணலாம். மலையின் அடியில் ஆழ்கடலுக்கு எதிரே மலைக்குகை போன்று பண்டைக்கோயிலின் மூல ஸ்தானத்தின் ஒரு பகுதி இன்னமும் எஞ்சியிருக்கின்றது. அது பல்லவர் காலக் குகைக் கோயில் போன்றது. அக்கோயிலின் எஞ்சிய பகுதி கடலுக்கு அடியில் உள்ளதென 1961ல் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்த மெக்வில்சன் என்பர் கூறியுள்ளார்.
இராவணன் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலே தென் கைலாயம் எனப் போற்றப்படுகின்ற திருக்கோணேஸ்வரரை பூஜித்து வந்தான் என்றும், இராவணன் தன் தாயாருக்குச் சிவலிங்கம் ஒன்று பெற விரும்பிப் பெயர்த்த மலை தென் கைலாயமாகிய கோணமாமலை என்றும் தட்சிண கலாய புராணம் கூறுகின்றது. இம்மலைப் பாறையில் ராவணன் வெட்டு என்ற பெயருடன் மலைப் பிளவு ஒன்று இன்னமும் இருக்கின்றது இதற்கு சான்றாக விளங்குகிறது. கி.பி.7ம் நூற்றாண்டில் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது. இதனையே திருஞானசம்பந்தர் மூர்த்தி நாயனார் தாயினும் நல்ல தலைவர் என்னும் தேவாரத்தில் போற்றிப் பாடியுள்ளார்.
அது மட்டுமல்ல திரிகோணமலை என்பது இயற்க்கை துறைமுகம் ஆம் அதுவே உங்கள் இலக்கு நன்றாக அறிவோம் அரசியில் செய்யுங்கள் அதிலே தமிழருக்கும் பங்கு கொடுங்கள் காலம் மாறலாம் ஆனால் காயங்கள் ஆறாது ஆம் தமிழன் மறக்ககூடியவனே காரணம் அவன் நல்லவன் ஆனால் அவன் மன்னிக்க கூடியவன் அல்ல காலம் வரும் காத்திருகிறோம்.
தாயே
தமிழே
தாய் கிழவியே
தமிழர்
தமிழராய்
தன்மானத்துடன்
தமிழ் திமிரு டன்
தேனி போற்ற
வாழ வழி செய்……
அரசியில் செய்யுங்கள் ஆனால்
எங்களை தமிழர்களை வாழவிடுங்கள் .
இப்படிக்கு.
தமிழர் வரலாறு தெரிந்த தமிழன்
அர.க.விக்கரம. கர்ண. ப