#திருவிடம்# #திராவிடம்# #Dravidam#

(திருவிடம்) திராவிடம் நிலப்பரப்பை குறிக்கிறது (தென் இந்தியா)
திராவிடன் என்பது அந்த நிலப்பரப்பில் வாழ்பவனை குறிக்கிறது
திராவிட மொழிகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது
அதில் முக்கிய மொழியாக 12 மொழிகள் இருப்பதாக கருதப்படுகிறது
தற்போது வழக்கில் உள்ள 4 முக்கிய மொழிகள் தமிழ்,கன்னடா,தெலுங்கு,மலையாளம்.
திராவிடம் என்பது நிலப்பரப்பே தவிர மொழி அல்ல.
மதம் அல்ல,அரசியல் அல்ல,ஆட்சி அல்ல.
திராவிட நிலப்பரப்பில் பல மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள்,பல அரசியல் சூழல்கள் நிகழ்ந்து இருக்கிறது,பல மதங்களை கடந்து இருக்கிறது.
திராவிடர்கள் வாழ்ந்த திராவிட நாடு என்று வைத்துக்கொண்டால் தற்போது தமிழர் வாழும் நிலப்பரப்பில் தமிழ் பிரதான மொழியாக இருக்கிறது…அது போல் கன்னடம், மலையாளம்,தெலுங்கு என்று அவரவர் நிலப்பரப்புகளை சார்ந்து பிரதான மொழியாக இருக்கிறது.
திராவிட நிலப்பரப்புக்குள் இருக்கும் இந்த மொழிகள் நிலப்பரப்பை மாற்றி பயனித்தற்க்கான அடையாளங்களும் இருக்கிறது .சரி அதை விடுங்க ஏன் தமிழ்நாட்டில் திராவிடத்தால் சமிப காலங்களில் குழப்பம் ஏற்ப்படுகிறது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்பு அனைத்து மக்களும் அவரவர் தற்போதைய நிலப்பரப்பை கடந்து ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள்
இந்திய சுதந்திர போராட்டம், மொழிவாரி மாநில பிரிப்பு போன்ற காலகட்டத்தில் தற்போதைய தமிழகம் மெட்ராஸ் PRESIDENCYயாக இருந்தது.
தென்னகத்து மொழி பேசுபவர்கள் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் தொடங்கப்பட்டது தான் இன்றைய திராவிட அரசியல் . நிலப்பரப்பையும் அதில் வாழ்ந்தவர்களையும் சேர்த்து தொடங்கப்பட்ட அரசியல்.
பின்னாளில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபின்
அவரவர் நிலப்பரப்புக்கு சென்று விட்ட பின்
அவரவர் நிலபரப்புக்கான மொழிவாரி மாநில அரசியலை தொடங்கிவிட்டனர்
அனால் தமிழர்கள் தமிழர்களுக்கான அரசியலை புதிதாக தொடங்காமல் பழைய திராவிட அரசியலையே தொடர்கிறார்கள்.
இதற்க்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் இருக்கிறது.
அது குறித்து பேசினால் இந்த பதிவின் நீளம் பெருகும், ஆகவே சுருங்க சொன்னால்.
திராவிடம் இருக்கிறது, அது இருக்கும் அது நிலப்பரப்பையும் அதில் வாழும் மக்களையும் குறிக்கும் அது தொடரும்.
ஆனால் தமிழகத்துக்கான திராவிட அரசியல் தொடருமா என்பது சந்தேகமே.
சரியாக சொன்னால் திராவிட அரசியல் என்பது ஒட்டுமொத்த தென் இந்தியாவில் நடக்கிற அரசியல் நிகழ்வுகளை தான் குறிக்க வேண்டும்.
ஆனால் அரசியல் கட்சியில் திராவிடம் என்கிற பெயர் இருப்பதால் தமிழகத்தில் இருக்கிற ஒரு சில கட்சிகளை அது குறிப்பதாக மட்டுமே இருக்கிறது..
ஆகவே அவர்களை திராவிடர்களின் பிரதிநிதிகள் என்று
திராவிட நிலப்பரப்பின் ஒருபகுதியில் வாழும் தமிழர்கள் மட்டுமே சொல்லிவிட முடியாது.
திராவிட அரசியல் ஆரிய எதிர்ப்பாகவே தொடங்குகிறது,அதற்க்கு சில காரணங்களும் இருக்கிறது, ஆரியன் மதம்,ஜாதி சார்ந்து அரசியல் செய்பவன் என்பதால் இது மத,ஜாதி எதிர்ப்பு அரசியலாகவும் மாறுகிறது,பின்னாளில் அது பகுத்தறிவை புகட்டும் அரசியலாகவும் ,ஆட்சி அதிகாரம் பிடித்தபின் பல அரசியல் கிளைகளாக உடைந்து ஊழல் குடும்ப அரசியலாகவும் மாறுகிறது
தற்போதைய காலகட்டத்தில் தமிழக திராவிட கட்சிகள் தங்கள் ஆரம்ப கால கொள்கை கோட்பாடுகளை மீறி வாக்குக்காக மதம் ஜாதி சார்ந்த அரசியலை செய்கிறார்கள்
தமிழர்கள் திராவிட நிலப்பரப்பையும் கடந்தவர்கள். ஆம் தமிழ்தாய் வாழ்த்து எப்படி மாற்றபட்டதோ அப்படியே திருவிடம் ஆனது.

இங்ஙனம் அறிந்துகொள்ள வேண்டியது பல உள்ளது.

என்றும்
முனைவர் அர.க.#விக்ரம கர்ணபழுவேட்டரையர்#