#padmawathi# #allaudinkilji# #malikkhafur#
வாழ்த்துகள் நண்பர்களே வெகுநாட்களாக மனதில் உருத்தி கொண்டிருந்த தகவல் ராணி பத்மாவதி, ரத்தன்சேனா, மற்றும் சுல்தான் அலாவுதீன் கில்ஜி மாலிக்கபூர்
யார் இவர்கள் ஏன் இந்த ஆர்பாட்டம் ஆதலால் வந்த வரலாற்று காதலால் தேடினேன் தகவல்களை ஆராய்ந்தில் வியக்க வைக்கும் பல தகவல்கள் இதில் சில மக்கள் அறிந்தவை பல அறியாதவை.  இதோ முதலில் யார் இந்த அலாவுதீன் கில்ஜி

அலாவுதீன் கில்ஜி பிறப்பு -1316. இயற் பெயர்: சுனா கான் கில்சி (Juna Khan Khilji). இந்தியாவை ஆண்ட இரண்டாவது துருக்கி-ஆப்கானியகலப்பினத்தை சேர்ந்தவர். கில்ஜி குலசுல்தான்களில் மிகவும் வலுவான ஆட்சியாளர். ஜலாலுதீன் கில்சிக்குப்பின் 1296 முதல் 1316 முடிய இருபது ஆண்டுகள், தில்லி சுல்தானகத்தைஆண்டவர். அலாவுதீன் கில்சி அறிவு மிக்கவர். எதையும் திட்டமிட்டு செயல் படுபவர். போர்க்களங்களில் தனது படையணிகளை நடத்திச் செல்வதில் கைதேர்ந்தவர் ஆசிய மைனர் என்றும் ஆழைக்கபட்டவர். அலாவுதீன் கில்சியின் படைகள் குசராத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த சோமநாதபுரம் (குசராத்து) சிவன் கோயிலை உடைத்தெறிந்தனர். மேலும் துவாரகையில் இருந்த கிருட்டிணன்கோயிலையும் இடித்து தரைமட்டம் ஆக்கினர். அரண்மனை மற்றும் கோயில்களின் கருவூலங்களில் இருந்த பெருஞ்செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.அத்துடன் நில்லாது, குசராத்து மன்னன் இரண்டாம் கர்ணதேவ வகேலாவின் பட்டத்தரசி கமலாதேவியை, கில்சியின் படைத்தலைவர்கள் சிறை பிடித்து அலாவுதீன் கில்சியின் முன் நிறுத்தினர். கில்சி, கமலாதேவியின் அழகில் மயங்கி, அவளை இசுலாமிய சமயத்திற்கு வலுக்கட்டாயமாக மதம் மாற்றி அவளது ஒப்புதல் இன்றி கில்சி அவளை திருமணம் செய்துகொண்டு, பட்டத்தரசியாக்கிக் கொண்டார்.
அரசியின் பணிப்பெண்னான திருநங்கையைமதமாற்றம் செய்து ’மாலிக் கபூர்’ என்று இசுலாமிய பெயர் சூட்டினார்.  இங்ஙனம் நிறைய களவாடபட்ட இளவரசி களையும் அவர்களது பணிபெண்களான நிறைய திருநங்கைகளையும் (பிற்காலத்தில் திருநங்கைகளைகொண்டு ஓளரங்கசீப் ஒரு படையைஉருவாக்கினாராம்)மதமாற்றம்
அதிலிருந்து  சுமார் 10 வருடங்கள் அலாவுதீன் கில்ஜியின் அந்தரங்க மதிப்பை பெற்றதின் பரிசு அவர் சிறுபடை வழிநடத்தி செல்லக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டது அதன் பிறகு மாலிக்கபூர் தென்னிந்தியா நோக்கி படைநகர்த்தினார் .

இதில் ராணி பத்மாவதி எங்கே வருகிறார்கள் இதோ தகவல்
மேவார் நாட்டின் மிகதகு அரசர் ராணா ரத்தன்சிங் இவரது மனைவியே ராணி பத்மாவதி ஆம் இவரது அழகே இவருக்கு எமனானது அல்லது ஒரு தேசம் அழிய காரணம் ஆனது (இங்கு அழகாயிருப்பது அல்ல பிரச்சினை அதை அவர்கள் ஊரரிய செய்ததே அவர்களின் அழிவுக்கு காரணமாயிற்று)
வடமேற்கு இந்தியாவில் மேவார் நாடு, மற்ற இராசபுத்திரர்களின் நாடுகளைவிட அதிக வலிமை மிக்கது. மேவார் நாட்டு மன்னர் பெயர் இரத்தன் சிங். அவரது பட்டத்து அரசியின் பெயர் பத்மினி. சுல்தான் அலாவுதீன் கில்சி 1303ல் மேவார் நாட்டின் மீது படையெடுத்தார். மேவார் கோட்டையை பல மாதங்களாக முற்றுகையிட்டு, வெளியில் இருந்து கோட்டைக்குள் செல்லும் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களை தடுத்து நிறுத்தினார் கில்சி. எனவே வேறு வழியின்றி மேவாரின் படைகள் கோட்டையை திறந்து கொண்டு வெளியே வந்து கில்சி படைகளுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டு போரிட்டனர். மிகக் கடுமையான போரில் மேவார் நாட்டு அரசர் இரத்தன் சிங் மற்றும் தலைமைப் படைத்தலைவர்கள் போரில் மாண்டனர். இதை அறிந்த பட்டத்தரசி பத்மினி உட்பட அனைத்து இராசபுத்திரகுலப் பெண்கள்  சுமார் 76000 பேர் சத்திரிய குல மரபுப்படி(மற்றோர் ஆண்மகன் தீண்ட கூடாது)  தீக்குளித்து (Jauhar) (புனித தற்கொலை) மாண்டனர். எஞ்சிய மேவார் நாட்டுப் படைவீரர்கள் இறக்கும் வரை  போரிட்டு மாண்டனர். ஆயினும் சுல்தான் அலாவுதீன் கில்ஜி தனக்கே உரிய பாணியில் மீதமுள்ள பணிபெண்கள் மற்றும் திருநங்கைகளையும் கவர்ந்து தன் அரண்மனை கொண்டு சென்றார்.
போ ரில் தோற்ற மேவார் நாட்டை தன் தில்லி சுல்தானகத்துடன்  இணைத்துக் கொண்டார் கில்சி. இப்பொழுது ஏற்கனவே தெரிவித்ததுபோல மதம் மாற்றம் செய்யபட்ட மாலிக்கபூர் எனும் திருநங்கை(bisexual) கில்ஜியின் உடனான 10ஆண்டுகளில் முரட்டு தனமான ஒரு போர்படைதளபதியாக மாறிருந்தார்.
இனி அவரை பற்றியும் அறிந்து கொள்வோம்.கில்ஜியின் அந்தரங்க மதிப்பை பெற்றதின் பரிசு அவர் சிறுபடை வழிநடத்தி செல்லக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டது அதன் பிறகு மாலிக்கபூர் தென்னிந்தியா நோக்கி படைநகர்த்தினார் .
1309 இல், அவர் தெலங்கானாவிற்கு எதிராக ஒரு பயணத்தை மேற்கொண்டார். வார்ரங்கல் முற்றுகையிடப்பட்டது மற்றும் அதன் ஆட்சியாளர்கள் சரணடைந்தனர். காஃபூர் டெல்லிக்கு நிறைய செல்வந்தனைக் கொண்டுவந்தார். 1310 ஆம் ஆண்டில், அவர்
துவாரகா மதுரா கைப்பற்றப்பட்டதோடு மாலிக் காபூர் நிறைய செல்வந்தனையும் பெற்றார். துவார்சுமாதாவிலிருந்து, கபுர் மதுராவின் பண்டிட் ராஜ்யத்திற்கு எதிராகத் தொடர்ந்தார்.
மதுராவை அபகரித்து ஆக்கிரமித்து அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டது. அதோடு நிற்காமல் தென்னிந்திய பகுதிகளை மூற்கதனமாக தாக்கி வாரங்கல் ,சென்னை பட்டினம் வெற்றி கொண்டதோடு மதுரை மற்றும்
ரமேஷ்வரம் வெற்றி கொண்டு அங்கு சிலை வழிபாடுகளை தடை செய்து அங்கு
சென்று அங்கு ஒரு மசூதியைக் கட்டினார். அதன் பின்பு திருவரங்கதின் மீது படை எடுத்தார். ஆம் இங்குதான் மாலிக்கபூர் ன் அழிவு தொடங்கியது.
மாலிக் காபூர் தலைமையிலான தளபதிகள் , காவேரி  கரையோரமாக  இராணுவம் வந்தடைந்தனர். காவேரி மற்றும் கொள்ளிடம்
இடையேயான ஒரு தீவில் ஒரு அற்புதமான கோயில் இருந்த திருவரங்கம், இறைவன் அரங்கநாத புனித பூமியாக கருதபட்ட இடத்தை சுற்றிபார்த்த மாலிக் காபுர் கோயிலின் பெருமை மற்றும் அதன் சுத்த அளவுமூலம்வியப்படைந்தார்.திருவரங்கத்தை தாக்க தொடங்கினார் அதிகமான கோவிலின் பொண்ணும் பொருளும் சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு 600 யானைகளில் மற்றும் 10000 குதிரைகளில் டண் கனக்கில் அனுப்பட்டன அதில் திருவரங்க பெருமானின் சோழர்களால் உருவாக்கி கொடுக்கபட்ட உற்சவ மூர்த்தியும் அடங்கும். இந்த மூர்த்தி மாலிக்கபூர் ன் மகள்( வளர்ப்பு மகளா அல்லது அவருக்கு பிறந்தவளா வரலாற்றில் குறிப்பு இல்லை) உற்சவ மூர்த்தி யை தனக்கே  தந்துவிடும்படி வேண்டியதால் அவரிடம்(சுரதனி) சேர்க்கப்படுகிறது. அதை சுரதனி விளையாட்டு பொம்மையாக விளையாட தொடங்கி அதன் கட்டுகடங்காத காதல் கொள்கிறார்.அவரது அன்பின் செயல்களால், ரங்கநாதர் ஒவ்வொரு இரவும் அவளுக்கு முன் தோன்றி பல்வேறு வடிவங்களிலும் அவதாரங்களிலும் தனது தரிசனத்தை தந்திருக்கிறார் என்று சுரதனி என்கிற இவரைத்தான் துளுக்கநாச்சியார் என்கிறார்கள் ஆனால் இவரை  சோழதேசத்து இளவரசி என்றும் திரட்டுகிறார்கள்.
ஆனால் ஆதே சமயம் திருவரங்கத்தில் இருந்துபொழுதுபோக்கு துறையினர் என்ற போர்வையில் சிலையை மீட்க ஒரு குழு தில்லியை அடைந்தனர், சுல்தான் முன் நடத்த அனுமதி கேட்டனர். அனுமதி வழங்கப்பட்டது போது, ​​ஒரு புனித ஏகாதசி தினத்தில், அவர்கள் மாலிக் காஃபூர் நீதிமன்றத்திற்கு முன் நிகழ்ச்சிகள் நிகழ்த்தினர். அவர்கள் தங்கள் சிறந்த நடன மற்றும் பாடல் திறன்களை வைத்து, இறுதியில் மாலிக்கபூர் ன் அன்பை வென்றனர் மாலிக்கபூர் ம் மகிழ்ச்சியடைந்தார், அதற்கு பதிலாக அவர் எதிர்பார்த்ததை அவர்களுக்கு கொடுத்தார். “நீகழ்ச்சி சிறப்பாக இருந்தது அதுவே சிறந்தது. உங்கள் திறமைக்கு நான் இந்த அரண்மனையின் எல்லைக்குள் ஏதாவது ஒன்றை உங்களுக்கு வழங்குகிறேன். நீங்கள் எதையாவது எடுத்துக் கொள்ளலாம் “என்று அவர் சொன்னார். உடனே திருவரங்கத்தில் இருந்து போன”ஷேன்ஷஷா”, முன்னணி நபர், ஆழ்ந்து குனிந்து, “ஆராங்கனின் சிலை எடுத்து செல்ல விரும்புகிறோம். அது நமக்குத் தேவையானது என்று கூறினார்கள். மாலிக்கபூர்ம் இசைந்தார்.

அதனால் அவர்கள் இரவு வருவதற்கு காத்திருந்தார்கள், இளவரசி தூக்கத்தில் இருந்தபோது, ​​அவர்கள் சிலை கண்டுபிடித்து
எடுத்து கொண்டு நகரத்திலிருந்து  புறபட்டார்கள்.
இளவரசிக்கு  இது தெரியாமல்  எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் நகரைவிட்டு ஓடினார்கள்.
சுரதனி( இளவரசி) தனது விக்கிரகத்தை காணாமல் மிகவும் கவலையடைந்தார், உடனடியாக அவள் குதிரை ஏறி  சிலையை தேடி புரபட்ட்்ட்ட்ர். மாலிக்கபூர்  ன்இராணுவமும் இளவரசி தொடர்ந்தது.
இராணுவத்தால் பயமுறுத்தப்பட்ட, துருப்புக்கள் பல்வேறு சிறிய குழுக்களாக பிரிந்து திருவரங்கத்தில்  மீண்டும் சந்திக்க முடிவு செய்தன. விக்கிரகத்தைச் சுமந்துகொண்டிருந்த மனிதன், அவனது தந்தை மற்றும் மகன், அடர்ந்த காட்டுக்குள் ஓடி, முற்றிலும் தங்கள் வழியை இழந்தனர். அலைந்து திரிந்து ஒருவழியாகசில நாட்களுக்கு  ஒருவழியாக திருவரங்கம் வந்தடைந்தனர். (இதில் நிறைய கட்டுகதைகள் உண்டு)இதற்க்கு நடுவில் மாலிக்கபூரின் மகள் ஆரங்கநாதரின் சிலையை திருவரங்கத்தில் முழுவதும் தேடி அதை கண்டுபிடிக்க முடியாமல் கருவூலத்தின் கதவுகளுக்கு முன்பாக அவள் உயிரையே கொடுத்தார்.

இதனால் மணம் நெகிழ்ந்து திருவரங்கத்தின் ஆலயத்தார்கள் அரங்கநாதர் தங்களின்
தலைவரின் கனவில் தோன்றி, இப்போது சரதனியை (மாலிக்கபூர் மகள்)தனது மனைவியாக(துளுக்கநாச்சியார் ஆன கதை ) ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். மற்ற நாச்சியாரர்களுக்கு கொடுக்கப்பட்ட எல்லா அம்சங்களையும் அவள் கொடுத்தாக வேண்டும்.  ரங்கநாதரின்  மனைவிக்கு (துளுக்கதாச்சியார்)ஒரு சன்னதி கட்டப்பட்டது.
இஸ்லாம் விக்கிரக வணக்கத்தைத் தடுக்கிறது என்பதால், அவர் ஒரு ஓவியம் வடிவத்தில் வணங்கப்பட்டு, கற்கள் மற்றும் பொன்னால் அலங்கரிக்கப்பட்டு இன்றும் வழிபாடு செய்கிறார்கள்.  இதில் நிறைய திரிபுகளும் இன்றளவும் பேசபட்டுவருகிறது.

மிக சிறியதாக கொடுக்கவேண்டும் என்று எண்ணியதன் விளைவே இந்த கட்டுரை இதுவே சில பக்கங்கள் சொல்கிறது.

நன்றி

என்றும்
வரலாற்றை தேடி
அர.க.விக்கிரம கர்ண பழுவேட்டரையர்