சீவக சிந்தாமணி 741ம் செய்யுளில் உள்ள
“ கள்ளராற் புலியை வேறுகாணிய ” என்ற
தொடருக்க அரசனைக் கொண்டு சீவகனை போர் காண வேண்டி என்று பொருள் கண்டார் உச்சிமேற்புலவர் நச்சினார்கினியர் இங்கே கள்ளர் என்பதற்கு அரசர் என பொருள் கண்டார். சீவகனைப் புலி என்று கூறியதற்கு ஏற்ப அரசரைக் கள்ளர் என்றார் எனின் இங்கு வீரத்தின் மேம்பட்டார் என்று பொருள் படுகிறது. எனவே வீரம் எனும் பொருள் பற்றியே கள்வர், கள்ளர் என்ற பெயர்கள் தோன்றியதாகத் தெரிகிறது.
இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் நாட்டுத்தலைவர்களாகவும், வேளிர்களாகவும், முடிவேந்தர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், பிற்றை நாட்களில் சமீன்தார்களாகவும், பெருநில உடைமையாளராகவும் வாழ்ந்து வந்துள்ளனர். கள்ளர்கள் தொன்று தொட்டு ஆட்சி இனமாக இருந்த காரணத்தால் இன்றும் அவர்கள் வாழும் பகுதிகள் நாடுகாளாக பகுக்கப்பட்டு அதன் தலைமைப் பொறுப்பை கள்ளர் இனத்தவர்களே வகித்து வருகின்றனர் தஞ்சை, மதுரை பகுதிகளில் இன்றும் பல நாடுகளும் நாட்டுக் கூட்டங்களும் நடைபெறுவதைக் காணலாம்.
குறிப்பாகப் பல இடங்களில் மற்ற சமுதாய மக்கள் பரவலாகவும், கள்ளர் இன மக்கள் சிறுபான்மையாகவும் உள்ள இடங்கிலும் அப்பகுதியி;ன் தலைமையை இவ்வினத்தார் ஏற்று செயல் பட்டு வருவதில் இருந்து அன்னாரது சிறப்பு உணரற்பாலதாகும். பல இடங்களில் மற்ற சமுதாய மக்கள் இவர்களை உரிமையுடன் “எங்கள் கள்ளர் எங்கள் கள்ளர்” என்று அழைப்பதை நோக்கும் போது இவர்கள் அச்சமுதாய மக்களுக்கு பல்லாற்றானும் உறுதுணையாய் இருந்து காத்து வருவது புலப்படும் எனவே இங்கு கள்ளர் என்ற சொல் தலைவர் என்ற பொருளில் வழங்கப்படுவது நோக்கத் தக்கதாகும்.
எனவே கள்ளர், கள்வர் சொற்கள் உயரிய பொருளைத் தருவதை நோக்க தலைவர், அரசர், கரியவர், உளம்கவர் பண்பாளர் என்று பொருள் கொள்ளலாம். இவ்வளவு சிறப்புப் பொருள் இருக்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பு பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா? ஏன்று சிந்தித்தால் அவர்களுக்கும் கள்ளர் என்ற சொல் மேற்கண்ட உயர் பொருளிலேயே வழங்கி இருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் எந்த தொல்குடியை சேர்ந்தவர்கள் என்பதைக் காண்போம்.
கள்ளர்களுக்கு எம்முறையில் இப்பெயர் வழங்கப்படுகிறது என்று சிறிது காண்போம்.
“கள்வனென் கிளவி கரியோனென்ப” – திவாகரம்
“கடகரிப்பெயரும், கருநிறமகனும், கற்க்கடக விராசியும்
ஞெண்டும் கள்வனென்” – பிங்களந்தை
சோழர்களை கருநிறம் பற்றியே மால் என்று அழைக்கின்றனர்.
பழுவேட்டரையர் என்போர் தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழைப்பழுவூர் மேலைப்பழுவூர் ஆகிய வட்டாரத்தை ஆண்ட நாடாள்வார்குடியினர்.( அரசப்பரம்பரை)
— இவர்கள் சோழ அரசப்பரம்பரையுடன் மணத்தொடர்பு கொண்டிருந்தனர்.
பழுவேட்டரையர்களுடன் தொடர்புடைய சோழர் கல்வெட்டுகளின் அட்டவணை
கல்வெட்டு இருக்குமிடம் – திருவையாறு
கோயில் பெயர் – பஞ்சநதீசுவரர் கோயில்
சோழமன்னர் – முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு – 10
பழுவேட்டரையர் – குமரன் கண்டன்
செய்தி – நிவந்தமாக அளிக்கப்பட்ட நிலத்தின் கிழக்கு மற்றும் வடக்கெல்லைகளில் இருந்த நிலம் குமரன் கண்டனுடையது. கல்வெட்டு இருக்குமிடம் – மேலப்பழுவூர்
கோயில் பெயர் – அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் – முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு – 12
பழுவேட்டரையர் – குமரன் கண்டன்
செய்தி – ‘குமரன் கண்டன் பிரசாதத்தினால்’ என்ற சிறப்புடன் குறிப்பிடப்படுகிறார். கல்வெட்டு இருக்குமிடம் – திருவையாறு
கோயில் பெயர் – பஞ்சநதீசுவரர் கோயில்
சோழமன்னர் – முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு – 19
பழுவேட்டரையர் – குமரன் மறவன்
செய்தி – இவர் நம்பி மறவனார் என்று குறிப்பிடப்படுவதால், இளவரசராக இருந்தார் என்று கொள்ளலாம். கல்வெட்டு இருக்குமிடம் – மேலப்பழுவூர்
கோயில் பெயர் – அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் – முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு – 22
பழுவேட்டரையர் – குமரன் மறவன்
செய்தி – இதிலும் ‘குமரன் மறவன் பிரசாதத்தினால்’ என்று குறிப்பிடப்படுகிறார். கல்வெட்டு இருக்குமிடம் – லால்குடி
கோயில் பெயர் – சப்தரிஷீசுவரர் கோயில்
சோழமன்னர் – முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு – 5
பழுவேட்டரையர் – குமரன் மறவன்
செய்தி – ‘அடிகள் பழுவேட்டரையர் குமரன் மறவன்’ என்று பெருமைப்படுத்துகிறது. கல்வெட்டு இருக்குமிடம் – திருப்பழனம்
கோயில் பெயர் – மகாதேவர் கோயில்
சோழமன்னர் – முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு – 6
பழுவேட்டரையர் – குமரன் மறவன்
செய்தி – குமரன் மறவனோடு தீப்பாஞ்ச அழகியான் பற்றிய தகவலைத் தருவதன் மூலம் குமரன் மறவனின் காலம் முடிந்துவிட்டதைக் குறிப்பிடுகிறது. கல்வெட்டு இருக்குமிடம் – கீழப்பழுவூர்
கோயில் பெயர் – திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் – முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு – 12
பழுவேட்டரையர் – கண்டன் அமுதன்
செய்தி – வெள்ளூர்ப் போரில் பராந்தகருக்காகப் போரிட்டு வெற்றி பெற்ற செய்தி. கல்வெட்டு இருக்குமிடம் – திருவையாறு
கோயில் பெயர் – பஞ்சநதீசுவரர் கோயில்
சோழமன்னர் – முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு – 14
பழுவேட்டரையர் – கண்டன் அமுதன்
செய்தி – இது ‘வெள்ளூர்ப் போரில் கண்டன் அமுதன் இறந்தார்’ என்ற அறிஞர்களின் கருத்தை மறுக்கிறது. கல்வெட்டு இருக்குமிடம் – மேலப்பழுவூர்
கோயில் பெயர் – அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் – சுந்தரசோழர்
ஆட்சியாண்டு – 5
பழுவேட்டரையர் –மறவன் கண்டன்
செய்தி – இவரது கொடை, ஆட்சிமுறை, வரியமைப்பு பற்றிப் பேசுகிறது. கல்வெட்டு இருக்குமிடம் – கீழப்பழுவூர்
கோயில் பெயர் – திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் – உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு – 9
பழுவேட்டரையர் – மறவன் கண்டன்
செய்தி – இவரது மறைவைத் தெரிவிக்கிறது. கல்வெட்டு இருக்குமிடம் – உடையார்குடி
கோயில் பெயர் – அனந்தீசுவரர் கோயில்
சோழமன்னர் – உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு – 12
பழுவேட்டரையர் – கண்டன் சத்ருபயங்கரன்
செய்தி – இவர் மறைவுக்காக இவர் தமையன் கண்டன் சுந்தரசோழன் இக்கோயிலில் ஐந்து அந்தணர்களை உண்பிக்கவும் நந்தா விளக்கெரிக்கவும் கொடையளித்தான். கல்வெட்டு இருக்குமிடம் – கீழப்பழுவூர்
கோயில் பெயர் – திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் – உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு – 13
பழுவேட்டரையர் – கண்டன் சுந்தரசோழன்
செய்தி – இக்கோயிலில் ஆடவல்லான் திருமேனியை ஊசலாட்ட வாய்ப்பாக ஒருமண்டபம் அமைத்துக் கொடுத்தார். கல்வெட்டுகளின்வழி ‘ஆடல்வல்லான்’ என்ற பெயரை முதன்முதலாக வரலாற்றுக்கு அறிமுகப்படுத்தியவர். கல்வெட்டு இருக்குமிடம் – மேலப்பழுவூர்
கோயில் பெயர் – அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் – உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு – 15
பழுவேட்டரையர் – கண்டன் மறவன்
செய்தி – நிவந்தம் அளித்தது.
கல்வெட்டு இருக்குமிடம் – மேலப்பழுவூர்
கோயில் பெயர் – அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் – முதலாம் இராஜராஜர்
ஆட்சியாண்டு – 3
பழுவேட்டரையர் – கண்டன் மறவன்
செய்தி – கொடும்பாளூரையாண்ட இருக்குவேளிர் குலத்திற்கும் பழுவேட்டரையர் குலத்திற்கும் ஏற்பட்ட மண உறவைத் தெரிவிக்கிறது.
கல்வெட்டு இருக்குமிடம் – மேலப்பழுவூர்
கோயில் பெயர் – அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் – முதலாம் இராஜராஜர்
ஆட்சியாண்டு – 15
பழுவேட்டரையர் – கண்டன் மறவன்
செய்தி – இவரைப்பற்றிக் குறிப்பிடும் கடைசிக் கல்வெட்டு இதுவே.
கல்வெட்டு இருக்குமிடம் – கீழப்பழுவூர்
கோயில் பெயர் – திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் – முதலாம் இராஜேந்திரர்
ஆட்சியாண்டு – 8
பழுவேட்டரையர் – யாருமில்லை
செய்தி – பழுவேட்டரையரின் பணிப்பெண் வீராணன் ஒற்றியூர் இக்கோயிலுக்களித்த கொடையைக் கூறுகிறது
சரித்திரத்தில் பழுவேட்டரையர்கள்
முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர்.
இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர்.
ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர்.
ஆதித்த சோழன் யானை மீது பாய்ந்து பல்லவ அபராஜிதவர்மனைக் கொன்றபோது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர்.
பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள்.
இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும் போது அவனை ஒரு பழுவேட்டரையர் தன் மடியின் மீது போட்டுக் கொண்டு, “இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன!” என்ற செய்தியைத் தெரிவித்தார்.
அரிஞ்சய சோழருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்.